பிரித்தானியாவில் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எயார் டாக்ஸிகள் வானை அலங்கரிக்கும் என வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில்,
‘2025ஆம் ஆண்டு இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் எம்12 ஆகியன முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இந்த எயார் டாக்ஸிக்கு உரிமம் பெறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வழி பயண பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அமையும். இந்த எயார் டாக்ஸிக்கான தொழில்நுட்பங்கள் தான் புதிது.
ஆனால், இயக்குவதற்கான வழிமுறைகள் ஒரு விமான இயக்கத்துக்கு நிகரானது. ஹீத்ரூ விமான நிலையத்துடன் இது தொடர்பாக ஆலோசனையில் உள்ளோம்’ என கூறினார்.