இத்தாலியில் கொவிட் அனுமதிப் பத்திரம், எதிர்வரும் (வெள்ளிக்கிழமை) அனைத்து பணியிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது
ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி வீதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள துறைமுகங்களில், இடையூறு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.
12 வயதிற்கு மேற்பட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமான இத்தாலியர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி அளவை செலுத்தியிருந்தாலும் சுமார் மூன்று மில்லியன் இத்தாலிய தொழிலாளர்கள் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் அனுமதிப் பத்திரம் இல்லாத ஒரு தொழிலாளி ஊதியம் இல்லாமல் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் மற்றும் அவருக்கு 1,500 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த வாரம் இப்சோஸின் கருத்துக் கணிப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு இத்தாலியர்கள் கொவிட் அனுமதிப் பத்திரம் அவசியம் என்று கருதுகின்றனர்.
இருப்பினும், ஒக்டோபர் 9ஆம் திகதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ரோமில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸாருடனான மோதல் வன்முறையாக மாற, ரோமில் உள்ள சி.ஜி.ஐ.எல். தொழிற்சங்க கட்டடத்தை வன்முறை எதிர்ப்பாளர்கள் சேதப்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை, மேலும் போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர் அல்லது வேலைக்கு செல்ல மாட்டார்கள்.