பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் சோமாலிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
25 வயதுடைய குறித்த நபரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விசாரிக்க ஒக்டோபர் 22 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் கொலையுடன் தொடர்புபட்ட ரீதியில், வேறெந்த சந்தேகநபரையும் தாம் தேடவில்லையென பிரித்தானிய பொலிஸார் கூறியுள்ளனர்.
1983 ஆம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ள டேவிட் அமெஸ் மறைவை முன்னிட்டு நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.