விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி – கலகெதரயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உரம் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்தப் பிரச்சினை இவ்வாறு நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.