பெலராஸில் உள்ள பிரான்ஸ் தூதர் நிகோலஸ் டி லாகோஸ்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்ஸ்கில் உள்ள அதிகாரிகள் திங்கள்கிழமைக்குள் வெளியேறுமாறு கோரியதை அடுத்து பெலாரஸுக்கான பிரான்ஸ் தூதர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை விட்டு வெளியேறியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பை வெளியிட்ட தூதரக செய்தித் தொடர்பாளர், பெலாரஷ்ய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறக் கோருவது ஏன் என்று கூறவில்லை.
ஆனால், நிகோலஸ் டி லாகோஸ்டே தன் விபரங்களை ஜனாதிபதி லூகஷென்கோவிடம் காண்பிக்க மறுத்ததாக உள்ளூர் ஊடகங்களில் கூறப்படுகிறது. இதனாலேயே அவர் வெளியேற்றப்பட்டிருப்பதாக ஒரு தரப்பு கூறுகின்றது.
இதேவேளை, பெலாரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் தூதர் வெளியேற வேண்டும் என்று கோரியது’ என்று தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார். 57 வயதான லாகோஸ்டே கடந்த ஆண்டு தான் அந்நாட்டில் தூதராக பணியமர்த்தப்பட்டார்.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான அதன் இணைத் தலைவர் ஆண்ட்ரி டிமிட்ரிவ் உட்பட சமீபத்தில் தடைசெய்யப்பட்ட அரச சாரா நிறுவனமான கோவோரி பிராவ்துவுன் பிரதிநிதிகளுக்கு லாகோஸ்ட் புதன்கிழமை விருந்தளித்ததாக தூதரகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஆண்டு கடந்த ஒகஸ்ட் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும் பெலாரஸுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.