நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.