சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி, பயணங்களை முன்னெடுக்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பதுளை பகுதிக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை எனவும், நாடு மற்றும் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதனை தவிர்த்து செயற்படுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலையில், பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.