உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப்படையினரும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம் சாலைகள் பழுதடைந்துள்ளதால் மீட்பு பணிகளில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாகவும், தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.