கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேலுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.