பிரான்ஸில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜேபரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின் விநியோகத்தை மீட்டெடுக்க சுமார் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கே ஒரே இரவில் காற்று வீசியதால், பரிஸ், நார்மண்டி, வடக்கு பிரான்ஸ் மற்றும் கிழக்கு லோரெய்ன் பகுதிகளைச் சுற்றியுள்ள ஐல்-டி-பிரான்ஸ் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) பிற்பகலில் இருந்து பேரழிவை ஏற்படுத்திய அரோரே புயலால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அதேபோல, மேற்கு பிரிட்டானி பிராந்தியத்தில், திடீர் வெள்ளத்தால் பல வீடுகள் அழிக்கப்பட்டன. பலர் வெளியேற்றப்பட்டனர்.
ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜேர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.