ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தலிபான்களுக்கு உதவுவதாக சீனா உறுதியளித்துள்ளது.
கட்டாரில் இன்று ஆப்கானிஸ்தானிய இடைக்கால தலிபான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் புதிய தலைவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம் என்றும் சீனா உறுதியளித்துள்ளது.
இதேவேளை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பிற பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கு தலிபான் அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.