பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300 இற்கும் மேற்பட்டோரின் தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பை மத்திய அரசு இன்று வழங்கவுள்ளது.