உலக கிண்ணக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அன்ரிச் நொக்கியா தெரிவு செய்யப்பட்டார்.