உலக கிண்ணக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஷார்ஜாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் நியூஸிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நிறைவில் 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணிசார்பாக சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்திய ஹரிஸ் ரவூப் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துள்ளது.