சீனாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை மீறுவதாகக் கருதப்படும் திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை ஹொங்கொங்கின் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 130,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தற்போது புத்துயிர்பெற்றுவரும் உள்ளூர் திரைப்படத் துறையை முடக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு, சீனா ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி, பிரிவினை, பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளுடன் கூட்டுறவை வைத்திருப்பதை குற்றமாக்குகிறது.
இருப்பினும் இது மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயற்பாடு என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் இது ஸ்திரத்தன்மையைப் பேணுவதாக அமுல்படுத்தப்பட்டது என சீனா தெரிவித்துள்ளது.