பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
தடுப்பூசியால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதில் புதிய மாறுபாடு மிகவும் திறன் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
உலகம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் புதிய மாறுபாடு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்றும் இலங்கையும் அவ்வாறே எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரவிருக்கும் குளிர்காலத்தில் இந்த மாறுபாடு வேகமாக பரவினால், உலகில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஏற்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.