சென்னை உட்பட 22 மாவட்டங்களில் எதிர்வரும் 2 மணித்தியாலத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இரவும் பகலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறைஎ பெரம்பலூர், அரியலூர், கடலூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.