கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப் படைகள் தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி முன்னேறி வருகின்றது.
இந்நிலையில் எத்தியோப்பியாவில் நிலவும் மிகவும் திரவமான பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் விரைவில் அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் தமது குடிமக்களை கோரியுள்ளது.
இந்த வாரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய அதிகாரிகள், பொதுமக்கள் ஆயுதங்களைப் பதிவு செய்து தங்கள் சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கத் தயாராக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து 400,000 க்கும் அதிகமானோர் பஞ்சத்தின் விளிம்பில் உள்ள நிலையில் யுத்தம் இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ளது.
இந்நிலையில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை, ஆபிரிக்க ஒன்றியத்தின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.