நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் தற்போது 5 இலட்சத்து 44 ஆயிரத் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 13 ஆயிரத்து 821 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15,280 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.