தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகள் அனுமதியை அடுத்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்ப பிரிவுகள் தொடங்கப்பட்டன.
இதனை அடுத்து தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்நிலையில் அடுத்த வாரம் மற்ற தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.