தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.