இலங்கையில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 30 ஆயிரத்து 20 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஆயிரத்து 767 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்து 461 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், 9 ஆயிரத்து 639 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 10 ஆயிரத்து 403 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 676 பேருக்கு தடுப்பூசியின் 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டன.
56 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 18 பேருக்கு தடுப்பூசியின் 2ஆவது டோஸும்செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.