பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக் குழுவின் தலைவரான ரஃபேல் க்ளக்ஸ்மேன், பிரெஞ்சு செய்தித்தாளான லிபரேஷன்க்கு அளித்த செவ்வியின்போது, தாய்வானுக்கு வலுவான ஐரோப்பிய ஆதரவைக் கோரியதாக தாய்வான் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்வானுடன் ஈடுபாட்டுடனான ஒத்துழைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பாவிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது என ரஃபேல் க்ளக்ஸ்மேன குறிப்பிட்டார்.
பீஜிங்க் ‘அபிலாஷைகள்’ தாய்வானுடன் மட்டும் நின்றுவிடவில்லை, தீவுக்கு அப்பால் செல்கின்றன என கூறிய க்ளக்ஸ்மேன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் தீவிற்கு விஜயம் செய்த பின்னரே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்புக் குழுவின் ஏழு உறுப்பினர்கள், தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், மற்றும் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிற பிரதிநிதிகளைச் சந்தித்து, தவறான தகவல் பிரசாரங்கள் மற்றும் பிற வகையான கலப்புத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவது பற்றிய தாய்வானின் விடயங்கள் பற்றி விவாதித்தனர்.
தாய்வான் சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 24 மில்லியன் மக்களைக் கொண்ட ஜனநாயக நாடாகும்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தனித்தனியாக ஆளப்பட்ட போதிலும், பீஜிங்க், தற்போது தாய்வானின் இறையாண்மையைக் கோருகிறது.
‘தாய்வானின் சுதந்திரம்’ என்றால் அது தம்முடன் நடத்தப்படவுள்ள போர் என சீனா மிரட்டியுள்ளது.
ஜூன் முதலாம் திகதியன்று சீன ஜனாதிபதி ஷி ஜின்ங் பிங் சுயமாக ஆளப்பட்ட தாய்வானுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு உறுதியளித்தார் மற்றும் தீவின் முறையான சுதந்திரத்திற்கான எந்தவொரு முயற்சியையும் முறியடிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.