2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து, நாளை மறுதினம் முதல் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்பின்னர், 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், டிசம்பர் 10ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.