புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக பல வீதிகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.