நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது தொகுதிகளின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை மேலும் 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் மொத்தமாக 3 ஆயிரத்து 375 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார்.