2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.
கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.