தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20இலட்சத்து நான்காயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் தாய்லாந்தில் இதுவரை 19ஆயிரத்து 934பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 305பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 95ஆயிரத்து 804பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 997பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 18இலட்சத்து 88ஆயிரத்து 536பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.