பெரும்பாலும் ஈராக், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், போலந்துடனான பெலாரஸின் எல்லையில் உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் நம்பிக்கையில் உறைபனி காலநிலைக்கு மத்தியிலும் அவர்கள் எல்லையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் பலர் இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பெலாரஸை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களுக்கு போலந்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அத்தோடு முள்வேலி மற்றும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் உறைபனி காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அவர்களுக்கு முக்கியப் பொருட்கள் அல்லது மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.