தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி, அதிகளவான கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
176 மொத்த சிகிச்சை மையங்களில் 30 சதவீதம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
இது எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கிறதென்றும் நிலைமை மோசமடைவதற்கு முன்பு அதைக் கட்டுப்படுத்துவது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வாறு இல்லையெனில், சில மாதங்களுக்கு முன்பு இருந்த இருண்ட காலகட்டத்திற்கு நாடு செல்லுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாடு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையை அடைய வேண்டுமானால், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.