வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற ஒன்லைன் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பாக அரச புலனாய்வுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி முறைப்பாடு வழங்கியிருந்தார்.
இதற்கமைவாகவே அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.