லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் மொத்தமாக நான்கு இலட்சத்து 67பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 66ஆவது நாடாக விளங்கும் லித்துவேனியாவில் இதுவரை நான்கு இலட்சத்து 43ஆயிரத்து 228பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆறாயிரத்து 317பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 24பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 36ஆயிரத்து 844பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 143பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.