போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு சுகாதாரத்துறை ஏற்கனவே நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என்றும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
அதனைமீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.