சிரியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான் என அமெரிக்க இராணுவம் நியாயப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று கிழக்கு சிரியாவில் உள்ள பாகுஸ் நகரில் வான்வழித் தாக்குதல்கள் நடந்தது.
இந்த வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய அரசாங்கம் என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். குழு போராளிகள் மீதான தாக்குதலில் 80பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 16பேர் ஆயுதமேந்தியவர்கள் என்றும், நான்கு பேர் பொதுமக்கள் என்றும் அமெரிக்கா அடையாளம் கண்டது.
60பேர் யார் பொதுமக்களா, ஆயுதமேந்திய வீரர்களா என வகைப்படுத்த முடியவில்லை. உயிரிழந்தவர்களில் பலரும் பொதுமக்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது கூறப்படுகின்றது.
இந்த வான்வழித் தாக்குதல் குறித்து ஒரு தனி விசாரணை நடத்தப்படவில்லை. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதலை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.