இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலங்களில் 12.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கப்பல் நிறுவனங்களின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் 10.73 கோடி டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் நாட்டிடன் நிலக்கரி இறக்குமதியானது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1.90 கோடி டன்னில் இருந்து 1.48 கோடி டன்னாக குறைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.