தான் எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமா செய்யபோவதாக மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தூதுவர் பதவியை ஏற்பதற்காகவே இவ்வாறு பதவியை இராஜிநாமா செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.