ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஏழு இலட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதம் பரவியுள்ள கொரோனா தொற்றினால் ஐரோப்பிய நாடுகளில் மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியனை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்துள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒரு சில நாடுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதுடன், மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோம். இல்லையேல் இறந்து போவோம் என ஜெர்மனி சுகாதார துறை அமைச்சர் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.