இலங்கையின் விமான போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு புதிய விமான நிறுவனங்கள் டிசம்பரில் இருந்து நாட்டிற்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, டிசம்பர் 3 ஆம் திகதி, ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் இருந்தும் வாரத்திற்கு இரு முறை இலங்கைக்கு விமான சேவையை முன்னெடுக்கவுள்ளன.
அதேவேளை போலந்தில் இருந்து டிசம்பர் 8 முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும் இத்தாலியில் இருந்து டிசம்பர் 15ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கைக்கு விமானங்களை இயக்கிய 37 விமான நிறுவனங்களில் 17 பயணிகள் விமானங்கள் தங்கள் சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளன எனவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
சரக்கு விமானங்களில் எட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று நோய்க்கு முன்னர் விமான சேவையை முன்னடுத்த அனைத்து விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.