மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம். அதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, அந்த முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற விடயம் சிறப்பு. ஆனால் 9 மாகாணசபைகளில் ஒன்பது சட்டங்கள் உள்ளன.
மத்திய அரசிடம் ஒரு சட்டம் உள்ளது. இது பொருத்தமற்ற நடவடிக்கை. எனவே, புதிய அரசமைப்பின் ஊடாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் இடம்பெற வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.