• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்துக்குள் செய்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்துக் கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து, அவற்றை பிரதான வீதிக் கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்” என்ற தலைப்பில், இன்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த ஊடகச் சந்திப்பு, வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டதோடு, இதில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

2024ஆம் ஆண்டுக்குள், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள அனைத்துச் சந்திகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சமிக்ஞை விளக்குக் கட்டமைப்பைப் பொறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இடைஞ்சல்கள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற மாற்று வழிகளைக் கையாண்டு, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதான வீதிகளுக்கு அருகாமையில் மாற்று வீதிகளை நிர்மாணிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பு – புத்தளம் வீதியை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், சிலாபம் நகரம் மற்றும் அந்த வீதியின் ஒரு பகுதி மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைத் தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர், மின்சாரம், டெலிகொம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போது, நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட வீதிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காக இதுவரை காணப்பட்ட முறைமைக்குப் புறம்பாக, உரிய நிறுவனங்களுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை பேச்சுவார்த்தைகளை நடத்தி, புதிய உத்திகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக, வீதியின் இருபுறமும் இரண்டு மீற்றர் பகுதியொன்றை ஒதுக்கியவாறே வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்தார்.

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில் இழுவைப் படகொன்று விபத்துக்குள்ளாகி, பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்த செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், 9 மாதங்களுக்குள் குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறிசுபீட்சத்தின் நோக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம்” எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையால் முன்னெடுப்பு!

Next Post

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

Related Posts

ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!
இலங்கை

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!
இலங்கை

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

2026-04-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

2026-04-27
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!
இலங்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

2026-04-27
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!
இலங்கை

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

2026-04-27
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

2026-04-27
Next Post
மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

நாட்டில் நிலவும் சீரற்றவானிலை – 14 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், 22 பேர் காயம்!

நாட்டில் நிலவும் சீரற்றவானிலை - 14 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், 22 பேர் காயம்!

6 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி- கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!

படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் - கிண்ணியா நகர சபை தலைவர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

0
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

0
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

0
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

0
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

2026-04-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

2026-04-27
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

2026-04-27
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

2026-04-27

Recent News

ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

2026-04-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

2026-04-27
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.