நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.