இந்தியாவில் தீவிரவாத செயல்களை மேற்கொள்ள பாகிஸ்தான் தலிபான்களின் ஆயுதங்களை பயன்படுத்துவதாக எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ்தான் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 67 ட்ரோன்கள் வந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த ட்ரோன்களின் அதிர்வெண் சிறியதாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், இத்தகைய ட்ரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.