ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினா செய்ததை தொடர்ந்து அந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் கடந்த 2020 பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு 46,361 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.