சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எந்தவித ஏற்பாடும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், குறித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை கொள்வனவு செய்வதற்கு எவரும் முன்வரவில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.