சீன உரத்திற்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தினால் சீனாவின் சேதன உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.