நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பொறியியலாளர் தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என இலங்கை மின்சார சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் முதல் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் தடை குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, மின்சார சபையின் (CEB) பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் தொழிற்சங்கங்கள் தமக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மின்வெட்டு நாசகார நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும், கூடிய விரைவில் மின்சாரத்தை மீட்டெடுப்பதே முன்னுரிமை எனவும் அவர் கூறினார்.