இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடைய மேலும் சில நோயாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய குறித்த இலங்கையரின் தனிமைப்படுத்தல் காலம் தற்போது நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒமிக்ரொன் தொற்று உறுதியான குறித்த பெண், எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.