கைத்தொழில் துறைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் திரவ பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரு எரிவாயு நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாடு பூராகவும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தபட்டது.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டும்
இருப்பினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.