இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் Galle Gladiators அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Galle Gladiators அணியும் பலப்பரீட்சை நாடாத்தின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Kings அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
Jaffna Kings அணி சார்பில் Jayden Seales மூன்று விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 02 விக்கட்டுக்களையும், Maheesh Theekshana, Suranga Lakmal ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 165 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Jaffna Kings அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்று 54 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.
துடுப்பாட்டத்தில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் சமித் பட்டேல் 03 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.