இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அதேநேரம் அண்மையில் சீரம் நிறுவனம் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் கோவிஷீல்ட் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.
இது குறித்தும் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.